Home Tamilnadu அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடைஇந்த கல்வி ஆண்டு அறிமுகம்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடைஇந்த கல்வி ஆண்டு அறிமுகம்

12
0

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. கணினி வகுப்புகள், ‘ஸ்மார்ட்’ வகுப்புகள், ‘கியூ-ஆர்’ குறியீடு புத்தகங்கள் என்று அரசு பள்ளிகளில் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தனி சீருடையும் இந்த கல்வி ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

புதிய சீருடையாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பச்சை நிற அரைக்கை சட்டையும், பச்சை நிற அரைக்கால் டவுசரும், மாணவிகளுக்கு அரைக்கை சட்டையும், குட்டை பாவாடையும் (ஸ்கர்ட்) அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டம் போட்ட பழுப்பு நிற சட்டையும், பழுப்பு நிற பேன்ட்டும், மாணவிகளுக்கும் அதே நிறத்தில் ஓவர் கோட்டுடன், சுடிதார் டைப்பில் சீருடையாக வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here