Home Other States ஐதராபாத் நிஜாம்களின் அரியவகை வைர நகைகள் கண்காட்சி

ஐதராபாத் நிஜாம்களின் அரியவகை வைர நகைகள் கண்காட்சி

63
0
உலகின் புகழ்பெற்ற வைர நகைகளுள் ஒன்றான ஐதராபாத் நிஜாம்களின் நகைகள் டெல்லியில் உள்ள தேசிய  அருங்காட்சியகத்தில் நேற்று கண்காட்சிக்காக  வைக்கப்பட்டன. இந்த நகைகள் கடந்த 1995 ஆம் ஆண்டு நிஜாம் ஜூவல்லரி டிரஸ்டியிடம் இருந்து  இந்திய அரசு ரூ.218 கோடிக்கு   வாங்கியதாகும்.  இதற்கு ‘இந்தியாவின் நகைகள்:நிஜாம்களின் நகை தொகுப்பு’ என பெயரிடபட்டுள்ளது.

 

இந்த ஜகோப் வைர நகைகள் 184.75 காரட் எடை கொண்ட 173 கண்களை கவரும் வகையில் உள்ளன.  இந்த கண்காட்சி மிகவும் அரிதானதாகும். இந்த கண்காட்சி பொது மக்களிடையே குறிப்பாக இளைஞர்களுக்கிடையே நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தினை பறைசாற்றும் வகையில் பார்வைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்காட்சியில் பங்கேற்ற கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா, ‘நமது நாட்டின் பாரம்பரியத்தினை அனைவரும் அறியும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு  மேற்கொண்டு வருகின்றது.  இவற்றுள் இக்கண்காட்சி முக்கியமான நடவடிக்கை ஆகும்’ என கூறினார்.

இதனையடுத்து வரைத்தால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை , கழுத்தணிகள், பெல்ட்கள் மற்றும் கலன்கள், வளையல்கள், காதணிகள், கவசங்கள், கால் வளையங்கள், விரல் மோதிரங்கள்,  வாட்ச் சங்கிலிகள், கைவளையல்கள், பொத்தான்கள் ஆகியவை இடம்பெற்றன.
நகைகள் மட்டும் அல்லாமல் நிஜாம்கள் பற்றிய புத்தக தொகுப்புகளும், அவர்களின் ஆவணங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here