Home Cinema தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர்-நடிகைகள் ஓட்டு போட்டனர்

34
0

விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸும் மீண்டும் போட்டியிட்டனர். இன்னொரு துணைத்தலைவர் பதவிக்கு பூச்சி முருகனை நிறுத்தினர்.இந்த அணி சார்பில் குஷ்பு, லதா, பிரசன்னா, சிபிராஜ், ராஜேஷ், சரவணன், கோவை சரளா, மனோபாலா உள்பட 24 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.

இவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த், துணைத்தலைவர் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதே அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பரத், சின்னி ஜெயந்த், காயத்ரி ரகுராம், நிதின் சத்யா, பூர்ணிமா ஜெயராம், பாண்டியராஜன், கே.ராஜன், கே.எஸ்.ரவிக்குமார், சங்கீதா, ஷாம் உள்ளிட்ட பலர் களம் இறங்கினர். இரு அணியினரும் ஆதரவு திரட்டி வந்த நிலையில் எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் அனுமதி மறுத்தது.

இதற்கிடையே, தங்கள் வாக்குரிமையை பறித்து விட்டதாக 61 உறுப்பினர்கள் புகார் செய்ததன் பேரில் சங்க பதிவாளரும் தேர்தலை நிறுத்தினார். இதனால் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில் தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் திட்டமிட்ட தேதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி நேற்று புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது.

பள்ளியை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அடையாள அட்டை வைத்திருந்த நடிகர் நடிகைகளை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். நடிகர்- நடிகைகள் வாக்குச்சாவடிக்கு செல்ல தனி பாதைகளையும் அமைத்து இருந்தனர். இரு அணி வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் பாதையில் திரண்டு நின்று வாக்களிக்க வந்தவர்களிடம் தங்களுக்கு ஓட்டு போடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.நிர்வாகிகள் பதவிகளுக்கும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தனித்தனி வாக்குப்பெட்டிகள் வைத்து இருந்தனர். ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றில் பிடித்த வேட்பாளர்கள் பெயர்களில் நடிகர்-நடிகைகள் முத்திரையை பதிவு செய்து வாக்கு பெட்டியில் செலுத்தினர்.

நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், விஜய், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், பிரபு, நாசர், பாக்யராஜ், ஆர்யா, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜயகுமார், ஐசரி கணேஷ், ஆதி, பாண்டியராஜன், ஸ்ரீகாந்த், விவேக், பிரகாஷ்ராஜ், கராத்தே தியாகராஜன், நடிகைகள் கே.ஆர். விஜயா, குஷ்பு, சுஹாசினி, வெண்ணிற ஆடை நிர்மலா, மீனா, வைஜெயந்திமாலா, நளினி, அம்பிகா, ராதா, பூர்ணிமா பாக்யராஜ், சோனா, ரோகினி, வசுந்தரா, விந்தியா, சச்சு ஆகியோர் ஓட்டு போட்டனர்.

மேலும் வாக்களித்த முக்கிய நடிகர்-நடிகைகள் விவரம் வருமாறு:-
மன்சூர் அலிகான், மயில்சாமி, சந்தானம், அருண்பாண்டியன், நகுல், எஸ்.ஜே.சூர்யா, பொன்வண்ணன், வின்சென்ட் அசோகன், விக்ராந்த், சின்னி ஜெயந்த, சார்லி, சுந்தர்.சி, சாந்தனு, ராம்கி, செந்தில், ஏ.வெங்கடேஷ், போஸ் வெங்கட், ஜாகுவார் தங்கம், டி.சிவா, கலையரசன், ரஞ்சித், கயல் சந்திரன், ரகுமான், ஓ.ஏ.கே.சுந்தர், தியாகு, பாபு கணேஷ்

விசு, கும்கி அஸ்வின், வைபவ், பிளாக்பாண்டி, ஹரிஷ் கல்யாண், வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கமுத்து, சக்தி, சரத்பாபு, சந்தான பாரதி, இளவரசு, விஜய்பாபு, கஞ்சா கருப்பு, ஆர்.கே.சுரேஷ், கவுண்டமணி, விக்ராந்த், ஆர்.சுந்தரராஜன், நிரோஷா, பசிசத்யா, சஞ்சனா சிங், லலிதகுமாரி, நித்யா, விஜயகுமாரி, ஜெயபாரதி, கலா ரஞ்சனி, சச்சு, எம்.என்.ராஜம், கே.ஆர்.வத்சலா, ராகசுதா, மும்தாஜ், ஷகிலா, நீலிமா, ரித்விகா.

தபால் ஓட்டுகளையும் சேர்த்து நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள் 3,173 பேர் ஆவார்கள். ரஜினிகாந்த் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தபாலில் வாக்கு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 1604 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. தபால் ஓட்டுகள் நீங்கலாக மொத்த வாக்குகளில் 50.55 சதவீத வாக்குகள் பதிவாயின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here