Home Business பெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம்

பெண்கள் பாதுகாப்பு செயலி; ஏர்டெல், ஃபிக்கி அறிமுகம்

68
0

ஏர்டெல் மொபைல் சேவை நிறுவனம், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

‘மை சர்க்கிள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி பெண்கள் எதிர்பாராத ஆபத்தான தருணங்களின் போது உதவிக்கு அழைக்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஏர்டெல் மட்டுமல்லாமல் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவன நெட்வொர்க்கிலும் இயங்கக்கூடியது என ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி மூலம் பெண்கள் ஆபத்தான தருணங்களில் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஐந்து பேருக்கு எஸ்ஓஎஸ் அவசர செய்தியை அனுப்பலாம். 13 மொழிகளில்இது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 13 மொழிகளில் அனுப்பலாம். அவசர செய்தி அனுப்பப்படும் போது ஆபத்தில் இருப்பவரின் இடம் குறித்த தகவல்களும் சேர்த்து அனுப்பப்படும். செய்தியில் அனுப்பப்படும் லிங்க் மூலம் ஆபத்தில் இருப்பவரின் இருப்பிடத்தை ரியல்டைமில் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here