Home Sports ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்:ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன்

34
0

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா), 3-ம் நிலை வீராங்கனையான ஸ்லோனே ஸ்டீபன்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் சிமொனா ஹாலெப் 7-6 (8-6), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்லோனே ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் சிமோனா ஹாலெப் வென்ற 3-வது பட்டம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் பெற்ற 18-வது பட்டம் இதுவாகும்.

வெற்றி குறித்து சிமோனா ஹாலெப் கருத்து தெரிவிக்கையில், ‘உண்மையிலேயே இந்த போட்டியில் நான் சோர்வடைந்து விட்டேன். இந்த வாரம் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற போட்டிகளில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் இடையே போதிய இடைவெளி தேவையானதாகும்.

ஸ்லோனே ஸ்டீபன்சுக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும் போதும் எனது ஆட்ட திறன் மேம்படுகிறது. என்னை பொறுத்தமட்டில் இது சிறந்த விஷயமாகும். ஸ்லோனே ஸ்டீபன்ஸ் மனரீதியாக வலுப்பெற்று இருக்கிறார். அவர் வலுவான போட்டியாளர்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here